இலைக் குளியலும், மண் குளியலும்… எதற்காக !?

இந்த எளிய சிகிச்சைகள் உடலைப் புத்தாக்கம் செய்வதோடு, நாட்பட்ட வியாதிகளையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது என சில பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்டு அதனூடே சில காலங்கள் பயணித்துப் பார்த்தேன்.  என் சொந்த அனுபவத்தில் அதன் பலன்கள் வியப்பூட்டக் கூடியதாக இருந்தது. இங்கே சத் தர்சனத்தில், இதுபோன்ற கழிவு நீக்கப் (Detoxification) பரீட்சார்த்தங்களை சற்றே ஆழமாக அவதானித்துப் பார்த்ததில் அதன் பின்புலத்திலிருந்த உடல் மனம் சார்ந்த சில சூட்சுமங்கள் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்கதாகவும், அசாத்தியமான நல்விளைவுகளைக் கொண்டதுமாக…